Categories
மாநில செய்திகள்

தமிழகமே இருளில் மூழ்கும் அபாயம்…. தமிழகம் நிச்சயம் இதை தாங்காது…. கமல்ஹாசன் அறிக்கை….!!!

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அடுத்த ஒரு சில நாட்களில் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டம் தமிழகத்தில் ஏற்பட்டால் தாங்காது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் தினமும் மின் தேவை 14,ஆயிரம் மெகாவாட் கோடை காலத்தில் இது சுமார் 17,ஆயிரம் மெகாவாட் வரை உயரும். மேலும் தமிழகத்தில் 4,320 மெகாவாட் வரை அனல்மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது. தடையில்லாமல் அனல் மின் நிலையம் இயங்குவதற்கு நிலக்கரி அவசியமானது. தமிழகத்தில் பொதுவாக 14 நாட்களுக்கு தேவையான நிலக்கரி வைத்திருப்பது வழக்கம். ஆனால் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர், அனல் மின்நிலையங்களில் 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படலாம் என்கின்ற அச்சம் தொழில்துறையினர் போன்ற அனைத்து தரப்பினரையும் சூழ்ந்துள்ளது. மேலும் கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் கடுமையான மின்வெட்டால் கோவை, திருப்பூர், கரூர்,சிவகாசி ஆகிய தொழில் நகரங்களில் பொருளியல் சிதைவுக்கு உள்ளாகியது. மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது.

ஏற்கனவே கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இப்போதுதான் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மீண்டும் மின்வெட்டு காலக்கட்டம் ஏற்பட்டால் தமிழகம் நிச்சயம் தாங்காது. மேலும் தமிழக அரசு தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற நடவடிக்கைகளை எடுக்கவும், மத்திய அரசு நிலக்கரி இறக்குமதி அதிகரித்து அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மையம் வலியுறுத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |