அதிகாரிகள் 6 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கிய 6 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவை ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகன சோதனையின் போது மொத்தமாக 54 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் உரிமையாளர்களுக்கு 33 லட்சத்து 87 ஆயிரத்து 35 ரூபாய் சாலை வரி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.