வலையில் சிக்கிய குரங்கு குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காத்துகுளி முருகன் கோவில் மைதானத்தில் பந்து வெளியே செல்லாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் வலை அமைத்து உள்ளனர். இந்நிலையில் குரங்கு ஒன்று இந்த வலையில் சிக்கி வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு உள்ளது.
மேலும் அதன் கழுத்து மற்றும் கால்களை கயிறு இறுகியதால் குரங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வலையில் சிக்கிய குரங்கை பத்திரமாக மீட்டனர்.