Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 2 மணிக்கு அலர்ட்…. சற்றுமுன் வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!

சென்னை பூண்டி ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு உபரி நீர் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 33.95 அடியாக உயர்ந்துள்ளதால் உபரிநீர் திறக்கப்பட இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் 4 மாவட்டங்களில் உள்ள ஏரி குளங்கள் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னையில் குடிநீர் தரும் 5 முக்கிய ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இவற்றின் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. பூண்டி ஏரியின் நீர்மட்டம் 35 அடியில் இருந்து  3.95 அடியாக உயர்ந்துள்ளது. அதனால் உபரி நீர் படிப்படியாக திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பொதுப்பணித்துறை அறிவித்திருப்பதாவது, பூண்டி ஏரியில் இன்று மதியம் 2 மணியிலிருந்து உபரி நீர் முதல் கட்டமாக வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் ஏரி நீர் செல்லும் கொசஸ்தலை பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .

Categories

Tech |