Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமண விழாவில் அசிங்கமா பேசிய இளைஞர்…… கத்தி குத்தால் மரணம்……. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே திருமண வரவேற்பு வீட்டில் குடி போதையில் தகராறு செய்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி  மாவட்டம் திருச்செந்தூர் அருகே  ராணி மகாராஜா புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ராஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் குடி போதையில் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Image result for கத்தி குத்து

இதனை அடுத்து குமாரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் இறந்த  நபரின் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |