Categories
அரசியல்

10வருஷம் இருந்தீங்க…! இதுலாம் நியாயமா ? ஓபிஎஸ்ஸை நினைத்து கவலை…!!

ஓபிஎஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டது எங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வருத்தமாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்திக்கையில், ஊடகத்திலிருந்து வருகிற ஒரிரு செய்திகளை மட்டுமே நம்பி ஒரு முன்னாள் துணை முதலமைச்சரே…   10 ஆண்டுகாலம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தவரே இதற்காக ஒரு அறிக்கை விடுவது எந்த வகையில் நியாயம் என்றும் தெரியவில்லை. அவரும் கூறியிருக்கிறார்… நிதிச்சுமையின்  காரணமாகத்தான் பிலிம் நெகடிவ் எடுப்பதில்லை என்கின்ற வகையில் புகார் கூறியிருக்கிறார்.

அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை அவர் ஆட்சியில் அவர் இடைக்கால நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த போது மருத்துவத்துறைக்கு 19,420 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது 18,933 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும்,  ஆக 487 கோடி குறைவாக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். உண்மையில் எங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வருத்தம்.

இந்த நிதிநிலை அறிக்கையில் தலைப்பு வாரியாக பார்க்க வேண்டும், மருத்துவத்திற்கு ஒதுக்கீடு, மருந்துகளுக்கு ஒதுக்கீடு, மருத்துவமனைகளுக்கான பராமரிப்புக்கு ஒதுக்கீடு இப்படி பல தலைப்புகளில் அதன் நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. இதில் எங்கேயாவது நீங்கள் ஒதுக்கிய நிதியில் இருந்து குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறதா ? ஏதாவது ஒன்றை சுட்டிக்காட்ட முடியுமா ? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Categories

Tech |