Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது கிடைக்கும்?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது பல அறிக்கைகளை அறிவித்திருந்தார். அதன்பிறகு முதல்வராக பதவியேற்றதும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பல திட்டங்களை நிறைவேற்றி வைத்தார். அதில் ஆவின் பால் விலையை குறைத்தல் மற்றும் கொரோனா நிதி உதவியாக ரூ.4000 வழங்குதல் போன்ற பல நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மெகா முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் திட்டத்தை இன்னும் நிறைவேற்றபடவில்லை என்று பல குற்றசாட்டுகள் வருகின்றன.

இதனிடையே தற்போது நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் பொது எதிர்க்கட்சியினர் இன்னும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்காமல் திமுக ஏமாற்றிவிட்டு வருகின்றன சுட்டிக் காட்டினர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். அந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார். எதிர்க்கட்சிகளின் திசை திருப்பல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |