தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை தமிழகத்தில் 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து முடிந்துள்ளது. அதில் முதல் மெகா தடுப்பூசி முகாமில் 2, 91,021 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நடைபெற்ற மாபெரும் மெகா தடுப்பபூசி முகாமில் 16,43,879 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து மூன்றாம் தடுப்பூசி மெகா முகாமில் 34,93,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் நான்காவது மெகா தடுப்பூசி முகாமில் 15.74 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஐந்தாவது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 30,000 தடுப்பூசி முகாம்கள் தொடங்கி சென்னையில் மட்டும் 1800 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி முகாம்கள் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள சின்னமலையின் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.