Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆன்ட்ரியாவின் அடுத்த படம்… இயக்குனராக அவதாரம் எடுக்கும் நடன இயக்குனர்…!!!

நடிகை ஆண்ட்ரியாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஆண்ட்ரியா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Image

அதன்படி ஜெயம் ரவியின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமாரின் புதிய படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். மேலும் இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், காளி வெங்கட், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . இந்த படத்திற்கு ரான் ஈதன் யோகன் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |