Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட செம… ரூ.25 லட்சத்தை பரிசாக வென்று அசத்திய சமந்தா… வெளியான ஆச்சர்ய தகவல்…!!!

நடிகை சமந்தா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரூ.25 லட்சத்தை பரிசாக வென்றுள்ளார்.

பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எவரு மீலோ கோடீஸ்வரரு’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, கொரட்ல சிவா, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா எவரு மீலோ கோடீஸ்வரரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

Hard to Dance with Jr. NTR - Samantha Akkineni

இந்நிலையில் சமந்தா இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து ரூ.25 லட்சத்தை பரிசாக வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அவர் தனது திரையுலக பயணம் குறித்து பேசியுள்ளார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, நாக சைதன்யா பிரிவு பற்றியோ பேசவில்லை என கூறப்படுகிறது. இக்கட்டான மனநிலையிலும் கூட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு தெளிவாக பதில் கூறிய சமந்தாவின் மனநிலையை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி தசரா பண்டிகை ஸ்பெஷலாக இந்த நிகழ்ச்சி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது .

Categories

Tech |