Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடுத்து நிறுத்திய போலீஸ்….. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அதன் பின் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை காவல்துறையினர் பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |