Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகத்தில் 3 மாவட்டங்களில்…. சுகாதாரத்துறை செயலாளர் அதிர்ச்சி தகவல்….!!!!

கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவ துறை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் 20 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 32,017 இடங்களில் 5 வது தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. 48.6லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது. மேலும் பல தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர உள்ளது. கொரோனா தொற்று போலியோவை போன்று அழிக்கப்படுகின்ற நோய் அல்ல என்பதனை மக்கள் உணர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கடலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் 3 பேர் இந்த வருடம் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |