அமெரிக்காவில் ஒரு பெண், ஓட்டலில் காபி கொண்டு வருவதற்கு அதிக நேரம் ஆனதால் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவிலுள்ள ஆர்கான்சஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் காபி சாப்பிடுவதற்காக ஒரு பெண் சென்றிருக்கிறார். எனவே காபி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். ஆனால், காபி வர அதிக நேரம் ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த அவர், அங்கு பணிபுரிந்த பெண் பணியாளர்களை கவனமாக வேலை செய்யுமாறு எச்சரித்திருக்கிறார்.
Karen Trashes McDonald’s because Her Coffee Took too Long pic.twitter.com/qi0V0MG2mk
— Karen (@crazykarens) October 4, 2021
அதன்பின், டேபிள் மேலிருந்த அனைத்து பொருட்களையும் கீழே வீசியதோடு கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி வீசியிருக்கிறார். எனவே, ஓட்டல் நிர்வாகம், காவல்துறையினரிடம் புகார் அளிப்போம் என்று மிரட்டியது. அதற்கு, அந்த பெண், தான் சர்க்கரை நோயாளி என்றும் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளதாகவும் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.