Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விலை உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தக்காளி செடிகள் சேதமடைந்துள்ளன.

அதனால் விளைச்சலும் பாதிக்கப்பட்ட வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாகவும், அவை மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Categories

Tech |