புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பாதுஷா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் காஜா நிஜாமுதீன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் தங்களுக்கு சொந்தமான கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக மேலப்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது பாதுஷா மற்றும் காஜா நிஜாமுதீன் ஆகிய 2 பேரும் அந்த கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 18 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.