Categories
அரசியல்

அதிமுக ஆட்சியில் பராமரிக்கவில்லை…. அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றசாட்டு…!!

 அதிமுக ஆட்சியில் இ- சேவை மையங்கள் சரியான பராமரிக்காததால் காரணத்தினால் குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாகவும், அதை  விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் திருநங்கைகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மக்களை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார் .

தொடர்ந்து பேசிய அவர், உண்மையிலேயே அதிமுக ஆட்சியில் இ சேவை மையங்களில் உள்ள கம்ப்யூட்டர்களை பராமரிக்கவில்லை கடந்த காலங்களில் அதற்கான முழு கவனம் செலுத்தப்படவில்லை என்பது உண்மைதான். இப்போது நாங்கள் அதை ஒவ்வொன்றாக கண்டறிந்து அதை சரி செய்து கொண்டிருக்கிறோம் வெகு விரைவில் இ சேவை மையம் முழுமையாக மக்களுக்கு பயன்படும் விதத்தில் செயல்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |