கடைக்கு சென்ற சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலைக்குமாரசுவாமி கோவில் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் டீ வாங்குவதற்காக கருப்பசாமி கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கருப்பசாமியை ஒரு நாய் கடித்து குதறி உள்ளது. இதனால் அலறி துடித்த சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நாயை விரட்டி அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, இங்குள்ள பல வீடுகளில் வேட்டை நாய்களை வளர்த்து வருகின்றனர். மேலும் நாய்கள் மூலம் முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். அப்படி வளர்க்கப்பட்ட நாய் தான் சிறுவனை கடித்துக் குதறியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.