Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுவரில் இருந்த துளை….. அதிர்ச்சியடைந்த மேற்பார்வையாளர்…. போலீஸ் வலைவீச்சு…!!

டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வலியஏலா பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் வியாபாரம் முடிந்த பிறகு மேற்பார்வையாளராக மைக்கேல்ராஜ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காலை திரும்பி வந்து பார்த்தபோது மதுபான கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி யுள்ளனர்.

அதாவது நள்ளிரவு நேரத்தில் கடையின் ஷட்டர் கதவை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர். ஆனாலும் அங்கிருந்த லாக்கரை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் லாக்கரில் இருந்த 2 லட்ச ரூபாய் பணம் தப்பித்து விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |