பூங்கா பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முக்கடல் அணையிலிருந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அணைப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு வன விலங்குகளின் நடமாட்டத்தை அறியும் பொருட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி சிறுத்தை ஒன்று பூங்காவுக்குள் நடந்து செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து வனத்துறையினர் சிறுத்தையை வந்து சென்ற பாதைகளை ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து வன சரகர் மணிமாறன் கூறும்போது, வன விலங்குகள் அடிக்கடி இந்த பகுதிக்குள் வந்து செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.