புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேத்தாம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை பயன்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரியவர்களும், சிறியவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து 2-வது நாளாக பொதுமக்கள் அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு வேப்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் தலைமையில் ஆழ்குழாய் கிணறு அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்களுக்காக புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க இன்று முதல் பணிகள் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.