Categories
தேசிய செய்திகள்

மறுமணம் செய்து கொள்… “வற்புறுத்திய தாய்”… கம்பியால் அடித்து கொன்ற மகள்..!!

மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஹரிநகரைச் சேர்ந்தவர் நீரு பஹா (47). இவர் மின்சார வாரியத்தில் உதவி தனி அலுவலராகப் பணியாற்றிவருகிறார். கணவரைப் பிரிந்த நீரு பஹா, தனது தாய் சந்தோஷ் பஹாவுடன் வசித்துவந்துள்ளார். கணவரைப் பிரிந்து வந்ததற்காக மகளை சந்தோஷ் பஹா தினமும் திட்டிவந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

Image result for marriage

மேலும், நீரு பஹாவை மறுமணம் செய்துகொள்ளுமாறு சந்தோஷ் பஹா வற்புறுத்திவந்ததாகத் தெரிகிறது. அதேபோல் சனிக்கிழமை இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் தாயை இரும்புக் கம்பியால் நீரு பஹா தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார்.

Image result for murder

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சந்தோஷ் பஹாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சந்தோஷ் பஹாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நீரு பஹாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தாயைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |