தமிழக அரசானது ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மென்பொருள் பொறியாளர் ஆவார். இவர் லட்சக்கணக்கில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் வேதனை அளிப்பதாகவும், மேலும் எனது ஆறுதலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் அப்பாவி இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.
எனவே குறைகள் இல்லாத புதிய சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தபடி புதிய சட்டத்தை இயற்றுவது தான் ஒரே தீர்வாக அமையும். இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது எவ்வித பயனும் அளிக்க போவதில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை உடனடியாக தமிழ்நாட்டு இளைஞர்களை காப்பதற்காக தமிழகம் அரசாணை பிறப்பிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்