நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எப்படியாவது வெற்றியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பு காட்டி வந்த நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்பட்டு வரும் நிலையில் சசிகலா தான் மீண்டும் கட்சியை சரி செய்வேன் என்றும், எம்ஜிஆர் இறந்த பிறகு கட்சி எப்படி இருந்ததோ அதேபோல தற்போது ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் அண்ணா படம் தற்போது இருக்கிறதா? மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்கள் மட்டுமே உள்ளன. அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும் கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவியை புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும். தலைமையை நம்பி அதிமுக இல்லை. தொண்டனையே நம்பி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.