Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை… 150 குடும்பங்கள் நிவாரண முகாமுக்கு மாற்றம்….!!!

ஹைதராபாதில் கொட்டித் தீர்த்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளன.

ஹைதராபாதில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் சியாத் நகரிலுள்ள குடியிருப்புகளில் நேற்று பெய்த கன மழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டனர். மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹைதராபாதின் சாரூர் நகரில் உள்ள லிங்கோஜிகுடா பகுதியில் 131.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. செகந்திராபாத்தில் 95.3 மில்லி மீட்டர் மழையும், பாட்டிகட்டாவில் 69.3 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி மேயர் கத்வாள் விஜயலட்சுமி மற்றும் எல்.பி. நகர் எம்.எல்.ஏ சுதீர் ரெட்டி ஆகியோர் பார்வையிட்டதை தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பகுதியிலும் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படாதவாறு பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஹைதராபாத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |