உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கிசான்யா என்ற பேரணியில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வந்திருந்தார். பேரணி நடைபெறுவதற்கு முன்னதாக அங்கு உள்ள துர்க்கை கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார். அப்போது அவருடன் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் பூபேஷ் பாக்கியல் உடனிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உத்திர பிரதேசத்தில் மாற்றம் கொண்டு வரும்வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.
Categories