கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டில் வருமானவரி சோதனை நடந்த வேளையில் எந்த பதட்டமும் இன்றி அவர் டிவியில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்துள்ளார்.
கர்நாடகாவில் நீர் மேலாண்மை ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மீது கூறப்பட்ட புகாரின்பேரில் வருமான வரித்துறையினர் எடியூரப்பாவின் மகன்கள் விஜயேந்திரா,ராகவேந்திரா ஆகியோரின் வீடு மற்றும் அவர்களின் உதவியாளரான உமேஷின் வீடு அலுவலகங்கள் உட்பட 50 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
இது கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது மேலும் எடியூரப்பாவை பெரும் நெருக்கடியில் தள்ளியது. ஆனால் இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் எடியூரப்பா தனது வீட்டின் அருகே உள்ள காரில் அமர்ந்தபடி டிவி மூலம் நேற்று முன்தினம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர்-டெல்லி அணிகள் விளையாடிய சீரிசை மிகவும் ஆர்வமுடன் பார்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.