தமிழகத்தில் மேலும் 4,ஆயிரத்து 900 செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி மண்டபம் முகாம் தேவிபட்டணம் ஆகிய இடங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக முதல்வர் ஸ்டாலினின் அறிவுரையின்படி 4,ஆயிரத்து 900 செவிலியர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலான தடுப்பூசி செலுத்துவதற்கு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை அளித்தார். இதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், நவாஸ்கனி எம்பி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளுடன் சென்றுள்ளார்.