இந்திய வம்சத்தை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பிரிட்டன் பிரதமரின் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் Nottinghamshire நகரில் உள்ள மேற்கு பிரிட்ஜ்போர்டில் அலிஷா காதியா(6) என்ற சிறுமி வசித்துள்ளார். இந்த சிறுமி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர். மேலும் இவர் புவி வெப்பமடைதல் மற்றும் காடு அழிப்பு விழிப்புணர்வு NGO-வில் உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், அலிஷா காதியா இதுவரை 3,000 பவுண்டுகளை non profit Cool Earth என்ற நிறுவனத்துக்காக திரட்டியுள்ளார். இந்த வகையில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக அலிஷா காதியா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ‘பாயிண்ட்ஸ் ஆஃப் லைட்’ விருதை பெற்றுள்ளார்.
அதோடு அலிஷா காதியா விழிப்புணர்வின் போது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு காடு வளர்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு வழிமுறைகளை தெளிவாக கூறியுள்ளார். இந்த நிலையில் சுமார் 80 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து பருவநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் அலிஷா காதியா(6) சுற்றுசூழலில் கொண்டுள்ள அக்கறையை கண்டு உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் டேவிட் அட்டன் பாரோ பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அலிஷா காதியா கூறியதாவது, “இந்த விருது எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. என்னை ஆதரித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார். மேலும் பிரிட்டிஷ் ப்ரஸ்தமரின் ‘பாயிண்ட்ஸ் ஆஃப் லைட்’ விருதை அலிஷா காதியா உட்பட 1,755 பேர் இதுவரை பெற்றுள்ளனர்.