Categories
தேசிய செய்திகள்

போன் கால் மூலம் பேசி பணம் மோசடி… 15 பேர் கைது… உஷாரா இருங்க மக்களே…!!!

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணம் பறித்த 15 கிரிமினல்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஒரு திருட்டு கும்பல் பல மக்களிடம் இருந்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கார்டில் இருக்கும் எண்ணை கேட்டு பின்னர் அவர்களின் வங்கியிலிருந்து பணத்தை திருடி வந்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 செல்போன்கள், 41 சிம் கார்டு மற்றும் 41000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து அழைப்பாத கூறி, ஹிந்தி கலந்த தமிழில் ஏடிஎம் கார்ட்டில் இருக்கும் எண்களை கேட்பது தற்போது வாடிக்கையாகி வருகிறது. இது குறித்து மக்கள் பலருக்கு விழிப்புணர்வு வரவே இல்லை. அது உண்மை என நம்பி அவர்கள் கேட்கும் விவரங்களை கொடுத்து விட்டு பின்னர் ஏமார்ந்து விடுகின்றனர்.

Categories

Tech |