Categories
தேசிய செய்திகள்

காற்று மாசிலிருந்து தப்பிக்க… கேரட், கீரை சாப்பிடுங்கள்… மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.!! 

அபாயகரமான நிலையிலுள்ள காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேரட் சாப்பிடுமாறு கூறியுள்ளார்.

நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன.

Image result for Harsh Vardhan

இந்நிலையில்  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “கேரட் சாப்பிட்டால் விட்டமின் ஏ, பொட்டாசியம் கிடைக்கும் என்றும். காற்று  மாசால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் கேரட் நம்மைப் பாதுகாக்கும்” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கும்  ப்ரோக்கோலி, கேரட், கீரை, சிவப்பு முட்டைக்கோஸ், சிவப்பு மிளகு போன்றவற்றின் மூலம் உங்கள் உணவில் போதுமான ஆக்ஸிஜனேற்றிகளைப் பெறுகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |