வெள்ளை நிறத்தில் இருக்கும் குழந்தைகளை அந்தமான் நிக்கோபார் தீவில் வசிக்கும் பழங்குடியினர் கொல்வதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதிலும் உள்ள தீவுகளில் வசிக்கும் பழங்குடியினர்கள் பல்வேறு சடங்குகள், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் நவீன யுகத்தில் இருக்கும் நமக்கு தவறாக தெரியும். அந்த வகையில் அந்தமான் நிக்கோபார் தீவில் ஜராவா பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த வகை பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் நமக்கு அதிர்ச்சியை அளிக்கும் விதமாக உள்ளது.
குறிப்பாக அங்குள்ள விதவைப்பெண்கள் அல்லது வேறு இனத்தவரின் பிறந்த குழந்தைகள் கருப்பு நிறத்தில் இல்லாமல் சிறிது வெள்ளை நிறத்தில் இருந்தாலும் அவர்களை அங்குள்ள பழங்குடியினர் கொன்றுவிடுவார்களாம். ஏனெனில் அது வேறு ஒரு இனத்தைச் சேர்ந்த குழந்தை என்பதால் அதனை அந்த பழங்குடியினர் கொல்வதாக கூறப்படுகின்றது.
இது போன்ற இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கடந்த சில மாதங்களில் கொன்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள காவல் நிலையத்திற்கு பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.