Categories
பல்சுவை

புதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்..!

பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 12 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியும் இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு படைத்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை வாரத்தின் தொடக்க நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் 269 புள்ளிகள் வரை உயர்ந்து 40,434 வரை உயர்ந்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் 75.85 புள்ளிகள் வரை உயர்ந்து 12 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது.ஐ.சி.ஐ.சி.ஐ., ஆ.ஐ.எல்., ஐ.டி.சி., டி.சி.எஸ் மற்றும் ஹெச்.டி.எப்.சி. உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் வேதாந்தா, டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ., ஹெச்.சி.எல் டெக், சன் பார்மா பங்குகள் லாபகரமாக வர்த்தகம் ஆகின.வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை 136.93 புள்ளிகள் உயர்ந்து 40,301.96 என வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 54.55 புள்ளிகள் அதிகரித்து 11,945.15 என வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Categories

Tech |