Categories
கிரிக்கெட்

CSK VS DC : பிரித்வி ஷா, ரிஷப் அதிரடி ஆட்டம் ….! சிஎஸ்கே அணிக்கு 173 ரன்கள் இலக்கு ….!!!

பிரித்வி ஷா ,ரிஷாப் பண்ட் மற்றும் ஹெட்மையர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி அணி .

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் டெல்லி, சிஎஸ்கே, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் .இதில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள சென்னை – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .

அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் – பிரித்வி ஷா ஜோடி களமிறங்கினர் . இதில் தவான் 7 ஆட்டமிழக்க ,அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு ரன்னில் வெளியேறினார் .இதன்பிறகு களமிறங்கிய அக்சர் படேல் 10 ரன்னில்  ஆட்டமிழந்தார் .இதில் அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா 3 சிக்சர் , 7 பவுண்டரி அடித்து 60 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் டெல்லி அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.இதன் பிறகு கேப்டன் ரிஷப் பண்ட்- ஹெட்மையர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இந்த ஜோடி 17.3 ஓவரில் 150 ரன்னை தொட்டது .இதில் அதிரடியாக விளையாடி வந்த ஹெட்மையர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார் .இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்துள்ளது. இதில் ரிஷப் பண்ட் 51 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் .சிஎஸ்கே அணி தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும், ஜடேஜா ,பிராவோ மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.தற்போது களமிறங்கியுள்ள சிஎஸ்கே அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது .

Categories

Tech |