Categories
உலக செய்திகள்

பதவியேற்ற மூன்றே நாட்களில்…. ராஜினாமா செய்த அமைச்சர்…. எதிர்ப்பு தெரிவித்த கட்சியினர்….!!

தொழில்துறை அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை நேபாள பிரதமரிடம் கொடுத்துள்ளார்.

நேபாளத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கஜேந்திர பகதூர்  ஹமால். இவர் அந்நாட்டின் தொழில்துறை அமைச்சராக மூன்று நாட்களுக்கு முன்னர் தான் பதவியேற்றுள்ளார். குறிப்பாக இவர் நேபாளம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான ராணாவின் உறவினர் ஆவார். மேலும் பகதூர் நீதிபதியின் உறவினர் என்பதால் அவர் தொழில்துறை அமைச்சராக பதவியேற்றதற்கு சொந்த கட்சியில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sher Bahadur Deuba becomes Nepal's PM for 5th time - World News

இவர் நீதிபதியின் வலியுறுத்தல் பெயரில் தான் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேபாள பிரதமரான ஷேர் பகதூர் தெய்பாவிடம் அளித்துள்ளார். மேலும் தன்னுடைய சுயவிருப்பத்தின் படியே தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |