கர்நாடக மாநிலம் பெலகாவி சேர்ந்த அர்பாஸ் என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற இந்துப் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் ஸ்வேதாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் அர்பாஸ் கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் அர்பாஸ் தொடர்ந்து ஸ்வேதாவை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வேதாவின் தந்தை கூலி படை ஒன்றை ஏவி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலன் அர்பாஸ் ஒரு இடத்திற்கு பேச வரும்படி அழைத்துள்ளார்.
அங்கு சென்ற அவரை கூலிப்படையினர் கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் வீசி விட்டு தப்பி விட்டனர். பிறகு கடந்த செப்டம்பர் 29 அன்று அர்பாஸ் தாயார் நசீமா தனது மகன் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அர்பாஸ் கொடூர கொலை தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளனர்.