இலங்கையில் வரும் நவம்பர் 16ஆம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது ஆதரவை தற்போது ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.கட்சியினருடன் இன்று நடைபெற்ற மத்திய செயற்குழுவைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற கட்சியினரின் அறிக்கையைவிட ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை தமிழர்களுக்கு ஓரளவு நன்மை அளிக்கும் வகையில் உள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகளை இன்னும் எந்த அதிபர் வேட்பாளர்களிடம் முன்மொழியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை சுமந்திரன் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒன்றாகத் தமிழர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவை வீழ்த்த மைத்ரிபால சிறிசேனவுக்குச் சிறுபான்மையினர் வாக்குகள் கைகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.