மழை பெய்த காரணத்தினால் தற்போது ஏரியின் நீர் மட்டமானது 46 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டை பகுதியில் வீராணம் ஏரி அமைந்து இருக்கிறது. இந்நிலையில் இதன் மூலமாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக தினசரி அனுப்பப்படுவதினாலும், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதினாலும் கிணற்றிலிருந்து குறைவான நீர் வந்த காரணத்தினால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து சில தினங்களாக வீராணம் மற்றும் கீழணை ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வினாடிக்கு ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வர தொடங்கியுள்ளது. பின்னர் கருவாட்டு ஓடை உட்பட மூன்று ஓடைகளின் வழியாக ஏரிக்கு மழைநீர் வருகின்றது. இதன் காரணத்தினால் ஏரியின் நீர் மட்டமானது தற்போது உயர்ந்து 46 அடியை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலை நீடித்துக் கொண்டே சென்றால் ஒரு சில தினங்களில் ஏரி முழு கொள்ளளவை எட்டி விடும் என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.