தமிழகத்தில் 200 பொது சேவை மையங்களில் ஆதார் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரன் கூறியுள்ளார். சிஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஷ்வரன் பேசியதாவது, பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை சிஎஸ்சி மையங்களுக்குச் சென்று மேம்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில் 200 பொது சேவை மையம் கிராமப்புறங்களில் இந்த வசதியை செய்துள்ளது. இனிமேல் பொதுமக்கள் தாலுகா அலுவலகம், வங்கி, தபால் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிஎஸ்சி மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதற்கு சேவை கட்டணமாக 50 ரூபாய் பொதுமக்கள் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.