வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சொட்டவனம் கிழக்குத் தெருவில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டுமனை வாங்கி புதிதாக வீடு கட்டுவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் வெற்றிவேல் தனது குடும்பத்துடன் மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன்பின் பீரோவில் வைத்திருந்த 4 கிராம் தங்கம், இரண்டு ஜோடி வெள்ளி கொலுசுகள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொள்ளையர்கள் கொண்டு வந்த டார்ச்லைட் 1 வீட்டில் கிடந்துள்ளது. இது குறித்து வெற்றிவேல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற டார்ச்லைட்டை மீட்டு விசாரணை நடத்தி வருவதோடு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.