உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 23.79 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பூசியால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும் என்று கூறி வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் டெல்டா வகை கொரோனா பரவலால் தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியா, பிரான்ஸ், பிரேசில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளது.
மேலும் உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை 237,969,872 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 4,856,327 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 215,108,827 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் மருத்துவமனைகளில் 18,004,718 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் லேசான கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 17,921,364 பேரும், கவலைக்கிடமான நிலையில் 83,354 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.