தமிழகத்தில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்ப மாட்டோம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். அதில் அவர், “அமைச்சர் என்ற முறையில் உங்களுடைய ஆய்வு கூட்டத்தில் நான் சொன்னேன் நாங்கள் எப்போதும் உங்களை காக்கின்றவர்களாக இருப்போம்.
யாரையும் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு சந்தேகத்தை நிவர்த்தி செய்வோம். உங்களை கட்டாயப்படுத்தி அனுப்ப மாட்டோம். நீங்கள் விரும்பினால் அனைத்து வசதி வாய்ப்பும் ஏற்படுத்தி உங்களுடைய ஒப்புதலோடு அந்த அரசாங்கத்தில் தகவலை தெரிவித்து உங்களை அனுப்புவதும் நாங்கள் தயாராக இருப்போம்”என்று கூறினார்.