Categories
உலக செய்திகள்

வன்முறையில் பலியான போலீஸ் அதிகாரி… தபால் நிலையத்திற்கு சூட்டப்பட்ட பெயர்… பிரபல நாட்டில் கௌரவமிக்க விழா..!!

அமெரிக்காவில் தபால் நிலையம் ஒன்றிற்கு வன்முறையில் பலியான காவல்துறை அதிகாரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் துணை போலீஸ் அதிகாரியாக ஹூஸ்டன் நகரின் ஹாரிஸ் பகுதியில் பணியாற்றிய சந்தீப் சிங் கடந்த 2019-ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கார் ஒன்றை ரோந்து பணியின் போது மடக்கி பிடித்துள்ளார். அப்போது சந்தீப் சிங்-ஐ காரில் இருந்த ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் சந்தீப் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால் முதன் முதலாக டெக்சாஸ் மாகாணத்தில் சந்தீப் சிங்கு-க்கு தான் சீக்கியர்களின் பாரம்பரியத்துடன் டர்பன் மற்றும் தாடியுடன் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் மேற்கு ஹூஸ்டன் நகரின் ஹாரிஸ் பகுதியில் நேர்மையான, கடமை தவறாத அதிகாரியான சந்தீப் சிங்-ன் சேவையை கௌரவப்படுத்தும் வகையில் நேற்று சந்தீப் சிங் பெயர் அங்குள்ள தபால் நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயர் சூட்டு விழாவில் காவல்துறை உயரதிகாரிகள், எம்.பி.,லிசி பிளட்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே “வன்முறை சம்பவத்தில் மகனை இழந்த எனக்கு ஆதரவும், அன்பும் தெரிவித்து வரும் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மகன் பெயர் தபால் நிலையத்திற்கு சூட்டப்படுவதை மிகவும் கௌரவமாக கருதுகிறேன்” என்று சந்தீப் சிங்-ன் தந்தை பியாரா சிங் தலிவால் கூறியுள்ளார்.

Categories

Tech |