Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS DC : ‘தல தோனியின் மாஸ் பினிஷிங்’ …..! இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே ….!!!

டெல்லி அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது .

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் டெல்லி, சிஎஸ்கே, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் .இதில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள சென்னை – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 60 ரன்னும் ,ஹெட்மையர் 37 ரன்னும் எடுத்தனர்.  இதில் கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சிஎஸ்கே அணி தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும், ஜடேஜா ,பிராவோ மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.இதையடுத்து களமிறங்கிய  சிஎஸ்கே அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது .இதில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் – டுபிளசிஸ் ஜோடி களமிறங்கினர் . இதில் டுபிளசிஸ்ஒரு  ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடி காட்டினார் .

இவர் 44 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் ஒருபுறம் விக்கெட்டுகள் இழக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிய  ருதுராஜ் 70 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது .இதில் முதல் பந்தில் மொயின் அலி அவுட் ஆகி வெளியேற, கேப்டன் டோனி 3 பவுண்டரி,ஒரு சிக்ஸர்  அடித்து விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். இறுதியாக சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்து  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதன் மூலம் 9-வது முறையாக சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்குள் முன்னேறி உள்ளது.

Categories

Tech |