நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மகாராஷ்டிரா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கூடுதல் நிலக்கரி வழங்கும்படி மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இதனிடையே மகாராஷ்டிர மாநிலத்தில் 13 அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 3,330 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.