மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பலூர் பகுதியில் விவசாயியான முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து தந்தையும், மகனும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த சமயம் பலத்த மழை பெய்து இருந்ததால் பாதை சேறும், சகதியுமாக இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை பார்க்காமல் சங்கர் அதனை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்த தனது மகனை காப்பாற்ற முத்துசாமி முயற்சி செய்துள்ளார்.
அப்போது ஈரக்குச்சியால் முத்துசாமி மின்கம்பியை அகற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கி விட்டது. இதனால் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.