புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்க்கு வார்டு வரையறை செய்யவில்லை எனக்கூறி, உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என கோரி நடைபெறும் முழு அடைப்பால் மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசு பேருந்தும் குறைந்த அளவிலேயே இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பேருந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Categories