Categories
சினிமா தமிழ் சினிமா

HBD Tabu – நடைபோடும் பூங்காற்றே… பூங்காற்றே…!!

தேசிய விருது பெற்ற நடிகை தபுவின் (tabu) 48ஆவது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சிறு தொகுப்பு…

‘காதல் தேசம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தபு. அதன்பிறகு ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஸ்நேகிதி’ என சில தமிழ் படங்களில் தபு நடித்திருக்கிறார். ஆனால் பாலிவுட், டோலிவுட்டில் அவர் மிக முக்கியமான நடிகை. இந்திய சினிமா பெருமை கொள்ளத்தக்க நடிகை தபு என்று சொன்னால் அது மிகையாகாது.

‘சாந்தினி பார்’, ‘மாச்சிஸ்’ ஆகிய படங்களில் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

‘காதலில்லாத முத்தம் பெறுவதைவிட உலகில் வேறொன்றும் பெரிய தண்டனையில்லை’ என ஒரு பாலியல் தொழிலாளி கூறுவதாக கவிஞர் சதீஷ் பிரபு தனது ‘சாக்கி’ கவிதை தொகுப்பில் எழுதியிருப்பார். ஒரு பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில்தான் ‘சாந்தினி பார்’ படத்தில் தபு நடித்திருந்தார். முகபாவனைகள் மூலம் பாலியல் தொழிலாளிகளின் வலியை நமக்குள் கடத்திவிடுவார்.

HBD Tabu

இப்படி ஒரு அருமையான கதாநாயகியை தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்திக் கொள்ளாதது காலக்கொடுமை. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் ராசியில்லாத பெண் என சித்தரிக்கப்படும் தபு, அஜித்துடன் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என ஏங்காதவர்கள் இங்கு இல்லை எனலாம்… இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

HBD Tabu

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் ஒரு படத்தில் தபுவுக்கு இப்படி வரிகளை எழுதியிருக்கிறார் வைரமுத்து.

HBD Tabu

பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

அந்த அளவுக்கு வசீகரமான தோற்றமுடையவர் தபு.

அதேபோல் ‘காதல் தேசம்’ படத்தில் தபுவை வாலி ’நடைபோடும் பூங்காற்றே’ என்கிறார்…

HBD Tabu

இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தபு தொடர்ந்து திரையுலகில் இயங்கி வருகிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தபு…

Categories

Tech |