பிரித்தானியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி குறித்த குழப்பம் காரணமாக 50 வயதிற்குட்ப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ்-க்கு எதிரான பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியானது மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்வதன் மூலம் 60 சதவீதம் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் கடந்த மாதம் பிரித்தானிய அமைச்சர்கள் உடல் உறுப்பு தானம் பெறுபவர்கள் மற்றும் புற்றுநோயாளிகள் உள்ளிட்ட பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுகளில் 500,000 பேருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
மேலும் அதற்கு “மூன்றாவது முதன்மை டோஸ்” என்றும் பெயரிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை பற்றி அறியாதவர்கள், மருத்துவமனை ஆலோசகர்கள் மற்றும் சில பொது மருத்துவர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செப்டம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மூன்றாவது “பூஸ்டர்” தடுப்பூசி பிரச்சாரத்துடன் சேர்த்து குழப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 50 வயதிற்குட்பட்டவர்களில் ஆபத்தான நிலையில் உள்ள நூற்றுக்கணக்கானோருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் “மூன்றாவது முதன்மை டோஸ்” பற்றி செப்டம்பர் 2-ஆம் தேதி பிரித்தானியாவின் மருத்துவமனை நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்களுக்கு NHS கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தகுதியான நோயாளிகளுக்கு இன்னும் அழைப்புகள் அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் NHS அவசர பின்தொடர்தல் கடிதத்தை இங்கிலாந்து மருத்துவர்களுக்கு அனுப்பியுள்ளது. மேலும் தகுதியுடைய மக்களுக்கு நாளைக்குள் இந்த அழைப்பிதழ்களை அனுப்பி வைக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.