Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டரா….? ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்….!!

சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா இந்த வருட இறுதிக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டதாக ‘சகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர், சகுந்தலம் படத்திற்காக நானும் எனது தந்தையும் சமந்தாவை சந்தித்தபொழுது அவருக்கு கதை பிடித்து விட்டது. ஆனால், படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியுமா என சமந்தா கேட்டார்.

நீலிமா, சமந்தா

நாங்கள் ஏன் என கேட்டபோது, நாங்கள் ”குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் நான் தாயாக விரும்புவதற்கு தான் முன்னுரிமை அளிப்பதாகவும்”சமந்தா கூறியதாக நீலிமா தெரிவித்தார். மேலும், இந்த படத்தில் சமந்தா முதலில் கையெழுத்திடவில்லை எனவும், பின்னர் திட்டமிட்டபடி படத்தை முடித்து விடுவோம் என்று கூறிய பின்னர் ஒப்புக்கொண்டதாகவும் நீலிமா பேட்டியில் கூறினார். மேலும் இதுதான் அவரது கடைசி படம் என்றும் அதன்பிறகு நீண்ட இடைவெளி எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக சமந்தா தெரிவித்தார்.

Categories

Tech |