Categories
மாநில செய்திகள்

தமிழர்கள் சோமாலியர்கள் ஆகிவிடுவார்கள் – முகிலன் எச்சரிக்கை….!!

புதிய வேளாண் ஒப்பந்த சட்டத்தால் தமிழர்கள் சோமாலியர்களாக மாறிவிடுவார்கள் என்பதால் அனைவரும் அச்சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் முகிலன் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கில் இன்று மதுரை மாவட்ட குற்றவியல் நான்காவது நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்.

Image result for mukilan

முன்னதாக வழக்கு ஒன்றில் திருச்சி சிறையில் முகிலன் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 22ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.அப்போது நீதிமன்ற வளாகத்தில் பேசிய முகிலன், தமிழ்நாடு அரசின் புதிய வேளாண்மை ஒப்பந்த சட்டத்தால் தமிழர்கள் அனைவரும் சோமாலியர்களாக மாற்றப்படுவார்கள். தமிழ்நாட்டை கார்ப்பேரட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுகின்றன. எனவே, தமிழ்நாட்டை சோமாலியாவாக மாறவிடாமலிருக்க அனைவரும் போராட வேண்டும்.

இந்தப் புதிய ஜல்லிக்கட்டுக்கு போராடியதற்கு தொடுக்கப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். தீபாவளியன்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் குழந்தை சுஜித்துக்கு கண்ணீர் வடித்தனர். இந்தியாவில் பல ராக்கெட்டுகளை செலுத்துகிறார்கள், ஆனால் ஆழ்துளையில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற ஒரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்க இவர்களால் முடியவில்லை என்பதை நினைத்தால் கவலையளிக்கிறது” என்றார்.

Categories

Tech |